டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட மூன்று பேரும் புழல் சிறையில் அடைப்பு:

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம். இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித் துறையில் பனி புரியும் உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறையில் பணிபுரியும் திருகுமரன் மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் ஆகிய மூன்று பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார்  கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும்  மாஜிஸ்திரேட் நாகராஜன் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

 

Share this post on: