தமிழக அரசின் இருசக்கர வாகன திட்டம்
அம்மா இருசக்கர வாகன திட்டம்த : மிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள பெண்கள் குறித்து அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
மனுக்கள் பெரும் தேதி மற்றும் இடம் :
ஊராட்சி ஒன்றியங்கள் பேரூராட்சி நகராட்சி அலுவலகங்களிலும் , மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படும்.
ஜனவரி 22 முதல் பிப்ரவரி ௫, ௨௦௧௮ வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும்.
வயது மற்றும் வருமான வரம்பு :
தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50 ,௦௦௦ /- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஊரின் கடைநிலைப்பகுதி, மலைப்பகுதி, மகளிரை குடும்பத்தலைவராக கொண்ட பெண், ஆதரவற்ற மகளிர் ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி (பெண்), திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மகளிர் மற்றும் திருநங்கையினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்க படும்.
பயனாளிகளின் கடன் வசதி :
கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125.சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்..
இரு சக்கர வாகனம் 01.01.2018க்குப் பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்..

பயனாளிகளின் பணியாற்றும் தகுதி:
- •நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள்.
- •கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள்.
- •அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.
- •பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார பெண் ஆர்வலர்கள்.
மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- •பிறந்த தேதிக்கான சான்றிதழ் •இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல்
- • உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் – நகல்.
- • வேலை வழங்கும் அலுவலரால்/நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமானச் சான்றிதழ்.
- • நிறுவனத்தலைவர்/ சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ். • ஆதார் அடையாள அட்டை.
- • எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள்.
- • பாஸ்போர்ட் அளவுள்ள புகைபடம்.
- • சிறப்புத் தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ்.
- • சாதிச் சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் )
- • உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளி அடையாள அட்டை
- • இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி.