சகலகலா வல்லவன் இப்போது சக காலா வல்லவன் என்று பாராட்டினார்:

நேற்று தனது கட்சி நிர்வாகிகளுடன், கோயம்பேட்டில் உள்ள திரைரங்கிற்கு சென்று காலா திரைப்படத்தை பார்த்து உள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

திரைப்படத்தை பார்த்த பிறகு இந்த படத்தை பற்றி அவர் கூறிய கருத்து. தான் படத்திற்கு மார்க் போடும் அளவு பெரிய ஆள் இல்லை. தனது சகோதரர்கள் விருப்பியதால் தான் காலா படம் பார்க்க வந்ததாக கூறியிருந்தார்.

மேலும் “காதல், ஆடல், பாடலையும் தாண்டி சமூக கருத்துக் கொண்ட படம் எனக்கு பிடிக்கும். அதனால் தான் காலா படம் பார்க்க வந்தேன். காலா படம் கருப்பில் ஆரம்பித்து கலர்புல்லா முடிந்தது. இதேபோல் மக்கள் வாழ்வும் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசியல் வேறு திரைப்படம் வேறு ரஜினி முதலில் நடிகர் பின்பு தான் அரசியல் வந்துள்ளார்.

அவர் முதலில் நடிகராக வந்த படங்கள் அனைத்திலும் அரசியல் இருக்கும் அதனால் இதை நான் படமாக தான் பார்க்கிறேன் என்றார். மேலும். நல்ல நடிப்பு, நல்ல தொழில்நுட்பம், நல்ல முடிவு, சகலகலா வல்லவன் என்று சொல்லப்படுபவர் சக காலா வல்லவன் ஆகியிருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.

Share this post on: