Rajinikanth | ரஜினிகாந்திற்கு பக்கபலமாக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன்:

நேற்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்த மக்களை காண சென்ற பின், செய்தியாளர்களிடம் அவர், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டது சமூக விருத்திகள் தான் எனவும், தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி உள்ளனர், அதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பொதுமக்களிடமிருந்து, பல அரசியல் வாதிகளிடமிருந்தும் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்.

பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த கூறியது மிகவும் சரியான கருத்து அதை நான் வரவேற்கிறேன் உண்மைநிலையை, விமர்சனங்களை மீறி எடுத்து சொல்வதே சரி என்று கூறியுள்ளார்.

இதனால் நடிகர் ரஜினிகாந்த் பாஜக வை சேர்ந்தவர் என்று விருமர்சித்த மக்களுக்கு மேலும் உறுதியளிக்கும் விதமாக தமிழிசை அவர்களின் வார்த்தை உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

ஏனென்றால், நடிகர் ரஜினிகாந்த் கருத்திற்கு அணைத்து கட்சி அரசியல் வாதிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழிசை மட்டும் ரஜினிகாந்த் கருத்திற்கு வரவேற்றுப்பு தெரிவித்துள்ளார்.

 

Share this post on: