தேடப்படும் குற்றவாளியாக மல்லையா
டிச. 18ந்தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படுவார் என டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.  இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.
அங்கிருந்து அவரை பிடித்து கொண்டு வரும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.  இதற்கிடையே, அவரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து மல்லையா அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந்தேதிக்குள் ஆஜராக வேண்டும்.  இல்லையெனில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று நீதிபதி அறிவித்தார்.
Share this post on: