டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி மனு தாக்கல் :

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமா பரவிவருவதால் இந்த காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் இதுவரை 2500 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு பாதிப்பால் உடல்நலகுறைவும், ஆங்காங்கே பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு அரசு செலவிட உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Share this post on: