கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நள்ளிரவில் அமல்படுத்தப்பட்ட பண மதிப்பு  இன்றோடு ஒரு வருடம் ஆனதால், இத்தினத்தை கருப்பு தினமாக பாவித்து திமுக துணை தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்து எதிர்கட்சியினரும் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.  இந்நிலையில் மதுரையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறுகையில், “பணமதிப்பு இழப்பு அறிவிப்பு நாள் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 125 கோடி மக்களுக்கு துன்பத்தை உருவாக்கிய நாள் நவம்பர் 8” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நாள் வரும் என்றும், பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே இழந்து நிற்கிறோம் என்றார். எந்த திட்டமும் இல்லாமலேயே மத்திய அரசு முன்யோசனையின்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Share this post on: